புதன், 28 ஆகஸ்ட், 2013

கனவுகள் 6 


கனவுகளை கனவு காண்பவர் நினைவு வைத்து இருப்பது மிகவும் கடினம், அப்படியே அவர் நினைவு வைத்திருந்தாலும் அவரால் அதனை முழுவதும் வெளிப்படுத்த முடியாது. அப்படியே அவர் முழுவதும் வெளிப்படுத்தினால் கேட்பவரால் அதனை அப்படியே உள்வாங்கிக்கொள்ள இயலாது. உதாரணமாக கனவில் ஒருவர் மிதக்கும் ஒரு அரண்மனையை கண்டார் என்று வைத்துக்கொள்வோம், அவர் மற்றவரிடம் சொல்லும்பொழுது கேட்பவர் வேறொரு அரண்மனையை கற்பனை செய்துகொள்வார்.

இதன் விளைவு கனவுகளை விளக்க முடியாத சூழல் உருவாகியது. 

கனவுகளுக்கு பழங்கள் உண்டு என்ற  நம்பிக்கை உண்மையா பொய்யா . இந்த கேள்விக்கு விடையை தெரிந்துகொள்ளவே இந்த பயணம்.

இதனை விளக்க சில கனவுகளை நாம் காணலாம்.

என்னுடைய பல கனவுகள் எனக்கு பல தருணங்களில் உதவியது, அதிலும் ஒருசில கனவுகள் வரும் அதில் நாம் ஒரு இருளில் நண்பருடன் வரும்போது தனிமைப் படுத்தப்படுவோம் அப்பொழுது நம்மை நோக்கி ஏதோ ஒரு நிழல் உருவம்  ( பேய் பூதம் போன்றவை) வருவது போன்று தோன்றும் உடனே நாம் இருக்கும் படுக்கையில் இருந்து கை கால்களை அசைக்க முடியாத நிலை  மற்றும் பிறரை அழைக்க இயலாத நிலையம் ஏற்ப்படும். 

இதனை சிலர் எப்படி எடுத்துக்கொள்கின்றனர் எனில் அவை (பேய்கள்) நாம் கனவில் இருக்கும்போது பேய் நம்மை பிடிப்பதாக கருதுகின்றனர். அதனால் தான் இந்த நிலை நமக்கு ஏற்ப்படுகின்றது.




எப்படியும் ஒரு ஒருபது நொடிகள் முதல் சில சமயம் இரண்டு நிமிடங்கள் வரை நாம் இந்த அசைவற்ற நிலையில் இருக்கின்றோம். 

நம்முடைய உயிர் ( ஆன்மா) சொல்லும் வேலைகளை நம்முடைய உடல் செய்ய இயலாமல் போகின்றது. அன்னிச்சை செயல் உடலில் நடந்தாலும் நம்மால் நம் உடலை கட்டுப் படுத்த முடியாத  நிலை. இதற்க்குக் காரணம்  நாம் கண்ட கனவில் இருந்து நிஜ உலகிற்கு திரும்பும் பொழுது நாம் சில வளைவுகளை கடந்து வரவேண்டி உள்ளது. சல சமயங்களில் அந்த வளைவுகள் தாண்டி வர கடுமையாக இருக்கின்றன . இதனாலேயே நாம் இந்த நிலையை உணர வேண்டி உள்ளது. 

மேலும் இந்நிலைக்கு உடல்நிலையும் காரணம் உள்ளது, பெரும்பாலும் அசைவ உணவு உண்பவர்களுக்கும், போதிய சத்து இல்லதவர்களுக்குமே இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருவது வாடிக்கை. இதனால் நல்ல சைவ உணவினை எடுத்துக்கொள்வதன் மூலம்  இந்த பிரச்சினையை தடுக்கலாம்  

அடுத்தது அப்படி அசைவின்றி படுத்துக்கிடந்து விழிப்பு வந்த பிறகு நம் இதய  ஓட்டம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக இருப்பது புலப்படும் மேலும்  நமக்கு நீர்வேட்கையும் அதிகமாக இருக்கும் 

காரணம் **அடுத்த பதிவில்                   
      

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

கனவுகள் 5 

கனவுகளுக்கு விடை காணும் முன் ககவுகளைப் பற்றியும், சிலரின் கனவுகளின் அனுபவங்களையும் ஆராய்ச்சி செய்வதன் மூலம் சிறிது அறியலாம்.

மாணவர்களுக்கு உண்டாகும் கனவுகள், 

இவர்களின் கனவுகளை ஆராய்ச்சி செய்வதற்கு முன்பு சிறப்பு பண்பு மற்றும் பொது பண்பு என்று இரு வார்த்தைகளின் உதவியை நாம் அறிவது அவசியம், சிறப்பு பண்பு என்பது ஒரு தனி நபருக்கு மட்டும் ஏற்ப்படுவது, பொது பண்பு என்பது பொதுவாக மனித சமூகத்தில் உள்ள அனைவருக்கோ அல்லது ஒரு சமூகத்தினருக்கோ ஏற்ப்படுவது.

சிறப்பு பண்பில் வரும் கனவுகள் ஒருவருக்கொருவர் வேறுபடும், பொதுப்பண்பு கனவு என்பது  ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு, அவர்களின் தொழிலின்  தன்மையைப் போருதவாறு வனவுகள் வரலாம்.




உதாரணமாக மாணவர்களுக்கு தேர்வு எழுதுவது, பாட புத்தகத்தினை  வீட்டிலேயே  வைத்துவிட்டு பள்ளிக்கு செல்வது போன்ற கனவுகள், ஆசிரியர் தனக்கு தெரியாத கேள்வி கேட்பது போன்ற கனவுகள் பொதுவாக அணைத்து மாணவர்களுக்கும் வருபவை.

அதே போலவே வேலை செய்பவர்களுக்கு, ஆடிட்டர் ( தணிக்கையாளர்) வேலை செய்யும் நபர் பல வவுச்சர், பில் போன்றவைகளை அதிகம் பார்ப்பதால்  அவர்களுக்கு கனவில் கூட இது போன்ற பில் வவுச்சர் போன்றாவை தோன்றும்.

ஆனால் கனவு அத்தோடு முடிவது அல்ல ...................

சிங்கப்பூரில் ஒரு தமிழ் பாரம்பரிய குடும்பத்தினை சேர்ந்த பெண்மணி, இந்தியா இதுவரை வராதவர், அவரது கனவில் ஒரு சிவலிங்கம் தோன்றி  அதன் சுற்றுப் பிரகாரமும் பிரகாசமாக தெரிந்து அது தமிழகம் என்றும் அறிந்து  கொண்டார் ஆனான் எந்த ஊர் என்று தெரியவில்லை. பிறகு தமிழகம் வந்து  எங்கங்கோ அலைந்து பிறகு புதுவையை சேர்ந்த ஒரு ஜோசியக்காரர்  மூலமாக அந்த சிவலிங்கத்தினை அடைந்து கோவில் கட்டினார் என்று நான்  கேள்விப்பட்டேன். அப்படியானால் மாணவர்களுக்கு தேர்வு என்று வரும் கனவுகள்  தன மன ஓட்டத்தின் வெளிப்பாடு எனில் இப்படிப்பட்ட் கனவுகள்  ??????????

இவையே கனவுகளை பற்றிய ஆராய்சிகளை கனவாக்கி வருகின்றது  


இனி வரும் பதிவில் பாப்போம்  கனவுக்கு என்ன தான் தெரியும் என்று .....................                  

கனவுகள் 4 

அந்த இளைஞனின் கழுத்தினை நோக்கியபடி  கூர்மையான பற்களைக் கொண்ட அந்த பூதம் முன்னேறியது உடனே அந்த இளைஞன் கத்தினான் பூதம் விலகி நின்றது. பின்னர் கனவும் கலைந்துவிட்டது.

மற்றொருமுறை மீண்டும் அந்த கனவு அவனுக்கு வந்தது இந்த முறை அவன் தூங்கும் முன்பு அந்த பூதம் கத்தினால் நம்மை விட்டுவிடும் என்ற நம்பிக்கையுடன் சென்றான். தூக்கமும் வந்தது கனவும் வந்தது , பூதமும் வந்தது . . . . . 

பூதத்தினை எதிர்கொண்டான் இம்முறை பயப்படவில்லை , இது கனவு இதில் இருந்து நாம் கத்தினான் எழுந்துகொள்ளலாம் என்ற துஞ்சல் அவனுக்கும்   இருந்தது    ....

பூதத்தினை எதிர்கொண்டான் , பூதத்திடம் சென்று "என்னை கொல்வாயா?" என்றான்.

அதற்க்கு பூதத்தின் பதில்  . . . . 

இது உன்னுடைய கனவு நீதான் முடிவு செய்யணும் .........



என்றவுடன் இவனுக்கு வியப்பு 

நமக்கும் தான் 

அன்றிலிருந்து அவனுக்கு அந்த கனவு வருவது இல்லை . . . . .

ஒவொருவரும் அவர்களுடைய கனவினைக் கட்டுப்படுத்த முடியும். அதேபோன்று வந்தது நல்ல கனவா அல்லது  கெட்ட கனவா என்று கூட அறிய முடியும் அதற்க்கு சில பயிற்சிகள் உள்ளன  

மன பயிற்சிகள் 

இந்த இளைஞன் செய்தது போல 

(மீண்டும் அடுத்த பதிப்பில் கனவுகள் )      

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

கனவுகள் 3


கனவுகளும் அதன் பலன்களும் ----


கனவுகளுக்கு பலன் சொல்வதில் சிறந்தவர் என் பாட்டி, என் தந்தையாரின் கனவுகளுக்கு பலமுறை விளக்கம் சொல்லும்பொழுது  நான் கேட்டுள்ளேன். என்னுடைய  இந்த ஆராய்ச்சிக்கு  காரணமும் அவரே.

என் பாட்டியின் விளக்கத்தில் கிடைத்த பதில் கனவுக்கும் வாழ்க்கைக்கும் முரண்பாடு அதிகம் அதாவாது கனவில் நல்லது போன்று தோன்றுபவை கெட்டதாகவும், கெட்டது போன்று தோன்றுபவை நல்லதாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

உதாரணமாக கனவில் திருமணத்தினை கண்டால் ஏதோ அசம்பாவிதம் நிகழப்போகின்றது என்றும். இதுவே ஒரு பிணத்தினை கண்டால் செல்வம் பெருகும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது  

உணவு உண்பது போன்ற கனவு கெட்டது  என்றும் மலம் தோன்றுவது நல்லது என்றும் கூட சொல்லுவார்கள் .

இது போன்று பல உள்ளன . . . . . .

ஆனால் என்னுடைய ஆராய்ச்சியில் தெளிந்தது ஒன்றுதான். நம்முடைய மனதிற்கு தெரியும் கண்டது நல்ல கனவா அல்லது தீய கனவா என்று. 

ஒவொருவருக்கும் கனவுகளும் அதன் பலன்களும் மாறுபடும் ஒருவருக்கு வந்த அதே பலன் மற்றோவருக்கு வராது.

இதனை ஒரு  குட்டிக் கதையின் மூலம் விளக்கலாம் 


......................        முன்னொருகாலம் ஒரு இளைஞன் இருந்தான் அவன் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவன். இரவில் வெளியே செல்வதை விரும்பாதவன்      
     
அதற்க்கு காரணம் அவனது கனவு , அவனது கனவில் ஒரு பூதம் தினமும் அவனை துரத்துவது  அவனுக்கு மிகுந்த பயத்தினை கொடுத்தது. அவன் அந்த பூதத்தின் முகத்தினை பார்த்ததே இல்லை. அதன் முகம் முடியால் மறைக்கப் பட்டு இருந்தது , பெரிய பற்களும் பெரிய நகங்களும் , உடல்முழுவதும் பல முடிகளும்  அடர்ந்து கரிய அந்த பூதம் எட்டு அடி உயரமாகவும் இருந்ததை கண்டு அவன் மிகவும் பயப்படுவான், தூங்கும் முன்பு பூசாரி மந்திரித்து கொடுத்த தாயத்தினை இருக்கப் பிடித்து  தூண்டிவிடுவான்.

இப்படி தினமும் அவனை தொந்தரவு செய்த பூதம் ஒருநாள் அவனை பிடித்தது   ( இதற்க்கு முன்பு அந்த பூதம்   துரத்தும் போது அது பிடிப்பதற்கு  முன்பே அவன் எழுந்துவிடுவான்) அனால் இன்று மாட்டிக்கொண்டான் . 

அந்த பூதத்திடம் கெஞ்சினான் என்னை உண்டு விடாதே என்று அந்த கொடூர பார்க்கலை அவனருகில் கொண்டுவந்த பூதம்  

அவன்  கழுத்துப்பகுதியில் தனது வாயை கொண்டு சென்றது   . . . . . .. . . . . . .


பூதம் அவனை கொன்றதா ..... ( அடுத்த பதிப்பில் )       

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

கனவுகள் 2 


கனவுகளுக்கு எதிர்காலத்தினை சொல்லும் இயல்பு உள்ளனவா ?


இந்த கேள்விக்கு தான் நான் விடை தேடி இங்கு வந்திருக்கின்றோம். சென்ற பதிப்பில் கனவுகளைப் பற்றி ஓரளவிற்கு பார்த்தோம். கனவு காணும் பொது நாம் நேரங்களைக் கடக்கின்றோம் என்று தோன்றுகின்றது. அதாவது இயல்பான வாழ்கையில் 10 நிமிடம் ஒருவன் தூங்கும்போது கனவு கண்டால் அவனால் 30 அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட நிமிடங்களில் கனவு கண்டது போன்று உணர முடியும். என்னுடைய கனவினை வைத்தே அப்படி குறிப்பிடுகின்றேன். அதிகாலை இரண்டரை மணிக்கு எழுந்த நான் மீண்டும் படுத்தேன். ஒரு நீண்ட கனவு வந்தது சுமார் இரண்டு மணிநேரம் நெறைய போராட்டங்களை  சந்திப்பது போன்ற கனவு அது, முடிந்து எழுந்து பார்த்தல்  மணி மூன்றரை மட்டுமே, ஒரு மணி நேரம் மட்டுமே கழிந்தது , அதிலும் எவ்வளவு நேரம் நான் கனவு கண்டேன் என்று தெரியவில்லை  ஆனால் அந்த கனவு பெரியது என்று மட்டும் தெரியும்.

அதே போன்று கனவுகளை நாம் அப்படியே கூறிவிட முடியாது சில நிகழ்சிகள் மறந்துவிடுவோம். சில சமயங்களில் முழு கனவினைக் கூட மறந்து விடலாம்  மீண்டும் அந்த கனவு தொடர்பான இடங்களுக்கு செல்லும்போதோ அல்லது அதன் தொடர்புடைய மனிதர்களை சந்திக்கும்போதோ  நினைவு வரும் . சில முழுமையும் வரும் சில கொஞ்சம் மட்டுமே , அதாவது அந்த பாத்திரத்தின்  அல்லது அந்த இடத்தின் தொடர்பு உள்ள பகுதி மட்டுமே நமக்கு புலப் படலாம்.

கனவினைப் பற்றிய நமது முன்னோரின் போக்கு:


பெரிய புராணம் என்பது தமிழியில் உள்ள புராணங்களில் மிகச்சிறந்ததும்  சைவ சமயத்தில் உள்ள  திருமுறைகளில் பன்னிரண்டாவது திருமுறையும் ஆகும்.

இதில் 63 நாயன்மார்களின் வரலாற்றுத் தொகுப்பு கொண்டது. இதில் குங்கி யக்கலய நாயனார் வரலாற்றில் , நாயனாரின் மனைவியின் கனவில் தோன்றிய இறைவர், சமைக்க சொல்லுவார் , பின்னர் நாயனாரின் கனவில் தோன்றி  வெட்டில் பால் சாதம் தயாராக உள்ளது என்றும் சொல்லுவார்  

அதே போன்று திருநீலநக்க நாயனாரின் புராணத்திலும் இறைவர் தோன்றி காட்சி அளிப்பார். 

" கனவிலும் தேவர்க்கு அறியாய் போற்றி "
என்று மாணிக்க வாசகர் திருவாசகத்தில் பாடுவது கனவினைப் பற்றிய  தமிழ் தொடரு விளங்கும்.             

கனவுகளும் அதன் பலன்களும் ------- அடுத்த பதிப்பில்         

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

கனவுகள் 

கனவுகள் இருவகைப்படும் ஒன்று தூக்கத்தில் காண்பது, மற்றொன்று ஆ பா ஜா அப்துல்கலாம் ஐயா சொன்னது போன்ற எதிர் காலத்தினைப் பற்றிய கனவுகள். இப்பகுதியில் நாம் காண இருப்பது தூக்கத்தில் வரும் கனவுகளே.   

கனவுகள் என்பவை தூக்க நேரங்களில் வருபவை என்று அனைவரும் அறிவோம், ஆனால் சில கனவுகள் விழித்திருக்கும் நிலையிலும் கூட வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நாம் கண்களை மூடும் நேரம் சிறு கண்ணசைவின் பொது கூட கனவுகள் வரலாம்.

கனவுகளில் பெரும்பாலானவை நம்மை அச்சுருத்துவதாகவும், பாலினப் புனர்சியாலுமே நிரம்பிவிடுகின்றது. கனவுகளுக்கு நம் எதிர்காலத்தினை உணர்த்தும் தகுதி உண்டு என்று சொல்பவர்களும் உண்டு.




கனவுகளைப் பற்றிய  பல ஆராய்சிகள் இன்றளவும் நடந்துகொண்டே இருக்கின்றன. இன்றளவும் அவற்றிக்கு சரியான விளக்கம் இல்லை, ஏன் எனில் கனவுகளில் கண்ட காட்சியை ஒருவர் மற்றொவருக்கு அப்படியே கூறிவிட முடியாது, அப்படியே கூறினாலும் மற்றொருவரால் அதனை அப்படியே புரிந்துகொள்ளவும் இயலாது மேலும் கனவு கண்டவருக்கே சில நிமிடங்களில் மறந்துவிடவும் வாய்ப்பு உள்ளது. சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு ஏழு முறை கனவு காண்கின்றான் என்று ஆராய்சிகள் சொல்லுகின்றன. ஆனால் நமக்கு அவை நினைவில் இல்லையே, காரணம் 80% கனவுகள் நான் தூக்கத்தில் இருந்து எழும் போது  மறந்து போகின்றது மீதம் உள்ளவை எழுந்த 2 நிமிடத்திற்குள் மறந்துவிடுகின்றன  
இதனால் தானோ என்னவோ கனவை நம்மால் அறிய கூட முடியவில்லை.                

கனவுகள் எதிர்காலத்தினை காட்டுவனவா ?

இந்த கேள்வி பொதுவாகவே நமது நாகரீகத்துடன் கலந்துவிட்ட சொல், கனவுகளை வைத்து பலர் வாழ்கையின் எதிர்வரும் நிகழ்வினை கணிப்பது இன்றளவும் வாடிக்கையாகிவிட்டது,   ஆனால்  கனவு என்பது நமது ஆழ்மனதின் விடைபுரியாத குதிருக்கு விடையாகவே உள்ளது 


எப்படி எனில் . . . .   

தேர்விற்கு செல்லும் மாணவர்கள் எனில், தேர்வு எழுவது போன்ற கனவுகள் தேர்விற்கு முன்னும் பின்னும் வருவது  வாடிக்கை. அதே போன்று நமது அலுவலக பனி தொடர்பான கனவுகள் போன்றவை வருவதும் உண்டு. 

ஆனால் சில நேரங்களில் நாம் இதுவரை காணாத இடங்களை எல்லாம் கனவுகளில் காண்கின்றோம். இந்த வகை கனவுகள் முன்னர் சொன்னதற்கு நேர்மாறானது, இவையே கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சியில்  நமக்கு பெரிதும் தடையாக இருக்கின்றது 

( மீண்டும் அடுத்த பதிப்பில் கனவுகளை விரிவாக காணலாம்)