கனவுகள் 5
கனவுகளுக்கு விடை காணும் முன் ககவுகளைப் பற்றியும், சிலரின் கனவுகளின் அனுபவங்களையும் ஆராய்ச்சி செய்வதன் மூலம் சிறிது அறியலாம்.மாணவர்களுக்கு உண்டாகும் கனவுகள்,
இவர்களின் கனவுகளை ஆராய்ச்சி செய்வதற்கு முன்பு சிறப்பு பண்பு மற்றும் பொது பண்பு என்று இரு வார்த்தைகளின் உதவியை நாம் அறிவது அவசியம், சிறப்பு பண்பு என்பது ஒரு தனி நபருக்கு மட்டும் ஏற்ப்படுவது, பொது பண்பு என்பது பொதுவாக மனித சமூகத்தில் உள்ள அனைவருக்கோ அல்லது ஒரு சமூகத்தினருக்கோ ஏற்ப்படுவது.
சிறப்பு பண்பில் வரும் கனவுகள் ஒருவருக்கொருவர் வேறுபடும், பொதுப்பண்பு கனவு என்பது ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு, அவர்களின் தொழிலின் தன்மையைப் போருதவாறு வனவுகள் வரலாம்.
உதாரணமாக மாணவர்களுக்கு தேர்வு எழுதுவது, பாட புத்தகத்தினை வீட்டிலேயே வைத்துவிட்டு பள்ளிக்கு செல்வது போன்ற கனவுகள், ஆசிரியர் தனக்கு தெரியாத கேள்வி கேட்பது போன்ற கனவுகள் பொதுவாக அணைத்து மாணவர்களுக்கும் வருபவை.
அதே போலவே வேலை செய்பவர்களுக்கு, ஆடிட்டர் ( தணிக்கையாளர்) வேலை செய்யும் நபர் பல வவுச்சர், பில் போன்றவைகளை அதிகம் பார்ப்பதால் அவர்களுக்கு கனவில் கூட இது போன்ற பில் வவுச்சர் போன்றாவை தோன்றும்.
ஆனால் கனவு அத்தோடு முடிவது அல்ல ...................
சிங்கப்பூரில் ஒரு தமிழ் பாரம்பரிய குடும்பத்தினை சேர்ந்த பெண்மணி, இந்தியா இதுவரை வராதவர், அவரது கனவில் ஒரு சிவலிங்கம் தோன்றி அதன் சுற்றுப் பிரகாரமும் பிரகாசமாக தெரிந்து அது தமிழகம் என்றும் அறிந்து கொண்டார் ஆனான் எந்த ஊர் என்று தெரியவில்லை. பிறகு தமிழகம் வந்து எங்கங்கோ அலைந்து பிறகு புதுவையை சேர்ந்த ஒரு ஜோசியக்காரர் மூலமாக அந்த சிவலிங்கத்தினை அடைந்து கோவில் கட்டினார் என்று நான் கேள்விப்பட்டேன். அப்படியானால் மாணவர்களுக்கு தேர்வு என்று வரும் கனவுகள் தன மன ஓட்டத்தின் வெளிப்பாடு எனில் இப்படிப்பட்ட் கனவுகள் ??????????
இவையே கனவுகளை பற்றிய ஆராய்சிகளை கனவாக்கி வருகின்றது
இனி வரும் பதிவில் பாப்போம் கனவுக்கு என்ன தான் தெரியும் என்று .....................

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக