கனவுகள் 4
அந்த இளைஞனின் கழுத்தினை நோக்கியபடி கூர்மையான பற்களைக் கொண்ட அந்த பூதம் முன்னேறியது உடனே அந்த இளைஞன் கத்தினான் பூதம் விலகி நின்றது. பின்னர் கனவும் கலைந்துவிட்டது.
மற்றொருமுறை மீண்டும் அந்த கனவு அவனுக்கு வந்தது இந்த முறை அவன் தூங்கும் முன்பு அந்த பூதம் கத்தினால் நம்மை விட்டுவிடும் என்ற நம்பிக்கையுடன் சென்றான். தூக்கமும் வந்தது கனவும் வந்தது , பூதமும் வந்தது . . . . .
பூதத்தினை எதிர்கொண்டான் இம்முறை பயப்படவில்லை , இது கனவு இதில் இருந்து நாம் கத்தினான் எழுந்துகொள்ளலாம் என்ற துஞ்சல் அவனுக்கும் இருந்தது ....
பூதத்தினை எதிர்கொண்டான் , பூதத்திடம் சென்று "என்னை கொல்வாயா?" என்றான்.
அதற்க்கு பூதத்தின் பதில் . . . .
இது உன்னுடைய கனவு நீதான் முடிவு செய்யணும் .........
என்றவுடன் இவனுக்கு வியப்பு
நமக்கும் தான்
அன்றிலிருந்து அவனுக்கு அந்த கனவு வருவது இல்லை . . . . .
ஒவொருவரும் அவர்களுடைய கனவினைக் கட்டுப்படுத்த முடியும். அதேபோன்று வந்தது நல்ல கனவா அல்லது கெட்ட கனவா என்று கூட அறிய முடியும் அதற்க்கு சில பயிற்சிகள் உள்ளன
மன பயிற்சிகள்
இந்த இளைஞன் செய்தது போல
(மீண்டும் அடுத்த பதிப்பில் கனவுகள் )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக